“உயிரோடு இருக்கும் வரைதான் சொந்தம்” சொத்துக்காக மட்டும் தான் எல்லாரும் வருவாங்க… எரியும் சிதைக்கு முன் கதறிய மகள், தாய்… உறவுகளின் சுயரூபத்தை தோலுரித்த வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உயிரோடு இருக்கும் வரைதான் சொந்தம்” சொத்துக்காக மட்டும் தான் எல்லாரும் வருவாங்க… எரியும் சிதைக்கு முன் கதறிய மகள், தாய்… உறவுகளின் சுயரூபத்தை தோலுரித்த வீடியோ…!!

Published

on

காசி மயானத்தில் எரிந்து கொண்டிருக்கும் தனது தந்தையின் சிதைக்கு முன்னால் அமர்ந்தபடி, இளம் பெண் ஒருவர் உருக்கமாக வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இப்போது கூட என் தந்தையின் சிதைக் கினல் எரிந்து கொண்டுதான் இருக்கிறது; ஆனால் இங்கே நானும், என் அம்மாவும், இன்னும் இரண்டு பேர் மட்டுமே இருக்கிறோம்” என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

தங்களது குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான உறவினர்கள் இந்த இறுதிச் சடங்கிற்கு வரக்கூட இல்லை என்றும், அப்படி வந்த ஓரிருவரும் கூடச் சிதை முழுமையாக எரிந்து முடிவதற்கு முன்பாகவே அங்கிருந்து கிளம்பிவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது தந்தைக்கு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் இருந்தும், அவர்கள் அனைவரும் சொத்துப் பேச்சுக்களைப் பேசுவதற்காக மட்டுமே வந்தார்களே தவிர, இறுதிவரை கூட இருக்கவில்லை என அந்தப் பெண் சாடியுள்ளார்.

Advertisement

இந்த உலகத்தில் நாம் உயிரோடு இருக்கும் வரை மட்டும்தான் மனிதர்கள் நமக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள் என்றும், நம் மரணத்திற்குப் பிறகு நம்மைப் பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை என்றும் அவர் அந்த வீடியோவில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பார்ப்போரை நெகிழச் செய்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in