LATEST NEWS
2000 ஆண்டு பழமையான தங்க மோதிரம்… உள்ளே இருந்த தமிழ் பிராமி ரகசியம்.. தாய்லாந்து அகழ்வாராய்ச்சியில் ஆச்சரியம்..!!
தாய்லாந்தில் அண்மையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரண்டு அரிய தங்க மோதிரங்கள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் விசேஷமாக, ஒரு தங்க மோதிரத்தில் இந்தியாவின் பழங்கால ‘பிராமி’ எழுத்து வடிவத்தில் ‘புசரகீதாசா’ (பூச நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்) என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த அரிய மோதிரத்திற்குச் சொந்தக்காரர் இந்தியாவின் பழங்கால ‘வைசியர்’ குலத்தைச் சேர்ந்த ஒரு வணிகராக இருக்கலாம் என்று தொல்லியல் துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த முக்கிய கண்டுபிடிப்பானது, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே மிகவும் நெருக்கமான மற்றும் வலுவான வர்த்தகத் தொடர்புகள் இருந்திருப்பதை வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இரு நாட்டு கலாச்சாரப் பரிமாற்றங்களுக்கும், கடல்வழி வாணிபத்திற்கும் இந்த அகழ்வாராய்ச்சி முடிவு மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
