LATEST NEWS
BREAKING: அர்ச்சகர் பயிற்சிக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை.. தமிழக அரசு அறிவிப்பு..!!
பழனி முருகன் கோயிலில் ஓதுவார், அர்ச்சகர் உள்ளிட்ட ஆன்மீகப் பயிற்சிகளுக்குச் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, முழு நேரப் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 மற்றும் பகுதி நேரப் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். பயிற்சி காலம் முழுமையாக முடியும் வரை இந்த நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பயிற்சி காலத்தின் போது அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலமாகவே முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க palanimurugan.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
