CRIME
நள்ளிரவில் குடும்பத்தோடு எல்லாருக்கும் சோத்துல மயக்கமருந்து… மறுநாள் காலையில் காத்திருந்த அதிர்ச்சி.. குழந்தையுடன் எஸ்கேப் ஆன பெண்ணின் பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில், பெண் ஒருவர் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு, தனது காதலனுடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுநாள் காலையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டு, அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பெண் தனது காதலனுடன் ஓடிப் போவதற்கு நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நள்ளிரவில் சரியான வாய்ப்புக் கிடைத்ததும், வீட்டில் இருந்த அனைவரையும் மயக்கமடையச் செய்துவிட்டு அவர் தப்பியோடியுள்ளார். மேலும், தப்பிச் செல்லும்போது அந்தப் பெண் தனது 5 வயது பெண் குழந்தையையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
