CRIME
“அரசு வேலை எனக்குத்தான் வேணும்!”.. தாயை பக்கா ஸ்கெட்ச் போட்டு மகள் செய்த பகீர் காரியம்.. க்ளைமாக்ஸில் தூக்கிய போலீஸ்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நீதிமன்ற அரசு வேலை மற்றும் குடும்ப சொத்தை அபகரிப்பதற்காக 23 வயது மகள் ஆயுஷி, தனது சொந்தத் தாயான நீரஜ் ஷர்மாவை கூலிப்படை வைத்துத் திட்டமிட்டுக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு ஆயுஷியின் தந்தை மறைந்ததைத் தொடர்ந்து, அவரது தாயாருக்குக் கருணை அடிப்படையில் நீதிமன்றத்தில் இளநிலை எழுத்தர் பணி கிடைத்துள்ளது. அந்த வேலை தனக்கு வேண்டும் என ஆயுஷி சண்டை போட்டு வந்த நிலையில், தாய் அதற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகள், தனது மாமா மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தாயைத் தீர்த்துக் கட்ட சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
இதற்காகக் கூலிப்படையை ஏவி, கடந்த ஜூலை 3-ஆம் தேதி நீரஜ் ஷர்மா மீது அதிவேகமாக ஸ்கார்பியோ காரை ஏத்திக் கொலை செய்துள்ளனர். பின்னர், இதைச் சாதாரண சாலை விபத்து போல் காட்டி போலீசாரை திசைதிருப்ப முயன்றனர். ஆனால், உயிரிழந்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இது திட்டமிட்ட படுகொலை என்பது அம்பலமானது. இந்த விபரீத வழக்கில் பெற்ற தாயையே காரை ஏற்றிக் கொன்ற மகள் ஆயுஷி, அவரது மாமா உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
