“கோவை காட்டில் ஆடைகளின்றி கிடந்த இளம்பெண் சடலம்!.. 12 நாட்களுக்குப் பின் வெளியான பகீர் உண்மை.. தலைமறைவான கணவன்.. திடுக்கிடும் பின்னணி”..!! – cinefeeds
Connect with us

CRIME

“கோவை காட்டில் ஆடைகளின்றி கிடந்த இளம்பெண் சடலம்!.. 12 நாட்களுக்குப் பின் வெளியான பகீர் உண்மை.. தலைமறைவான கணவன்.. திடுக்கிடும் பின்னணி”..!!

Published

on

கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் ஆடைகள் ஏதுமின்றி மர்மமான முறையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கினர். ஆரம்பத்தில் உயிரிழந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் கிடைக்காததால், அவரது அடையாளத்தைக் கண்டறிவதே போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட தீவிரத் தேடுதலுக்குப் பிறகு, சடலமாக மீட்கப்பட்ட பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷா என்பது 12 நாட்களுக்குப் பின் உறுதி செய்யப்பட்டது.

அவர் தனது கணவர் ஜெகன் பிரதானுடன் கோவைக்கு வந்து, கட்டுமானப் பணிகளில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. மனைவியின் மரணத்திற்குப் பிறகு ஜெகன் பிரதான் திடீரென தலைமறைவானதால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து ஒடிசாவிற்கு தப்பிச் சென்று பதுங்கியிருந்த ஜெகன் பிரதானை தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கைது செய்தனர். விசாரணையில், வர்ஷா அடிக்கடி வேறு ஆண்களுடன் செல்போனில் பேசியதால் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, ஆத்திரமடைந்த ஜெகன் தன் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் சந்தேக மரணமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு, சடலத்தைக் காட்டுப்பகுதிக்கு எப்படிக் கொண்டு சென்றார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in