CRIME
“இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையா..?” ரேஷன் கடையில் கையும் களவுமாக சிக்கிய தற்காலிக பணியாளர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
திருப்பூர் வடக்கு மாவட்டம், வேலம்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் எடையில் மோசடி செய்ய முயன்ற தற்காலிகப் பணியாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களுக்குச் சேர வேண்டிய அரிசியை முறைகேடாகக் குறைக்கும் நோக்கத்துடன், டிஜிட்டல் எடையளவை இயந்திரத்தின் கீழே ஒரு கிலோ இரும்பு எடைக் கல்லை அவர் ரகசியமாக மறைத்து வைத்து கைவரிசை காட்டியுள்ளார். இந்தத் திடுக்கிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட வேலம்பாளையம் நியாய விலைக் கடையில் டிஜிட்டல் தராசின் கீழ் ரகசியமாக 1 கிலோ இரும்பு எடைக்கல் குண்டை மறைத்து வைத்து அரிசி எடையில் முறைகேடு செய்த விற்பனையாளர் தற்காலிக பணி செய்யப்பட்டுள்ளார்.#Velampalayam #Tiruppur pic.twitter.com/LUkAwAn4fg— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) August 18, 2026
ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளில் கைவைக்கும் இதுபோன்ற முறைகேடுகள் பொதுமக்களிடையே கடும் கண்டனத்தைப் பெற்று தந்துள்ளன. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடையில் துறை சார்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். எடையில் மோசடியில் ஈடுபட்ட தற்காலிகப் பணியாளர் மீது உடனடியாகச் சட்டப்பூர்வமான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்கக் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
