VIDEOS
“அடப்பாவமே, வெறும் 1 ரூபாய்க்காக இப்படியா..?” கேப் டிரைவரை நடுங்க வைத்த பெண் பயணியின் ரகளை.. இணையத்தை அதிர வைக்கும் ஷாக்கிங் வீடியோ..!!
டெல்லியில் வாடகைக் காரில் பயணித்த பெண் ஒருவர், மீட்டர் கட்டணம் 199 ரூபாயைக் கடந்தவுடன் ஓட்டுநரிடம் சரியாக ஒரு ரூபாய் சில்லறை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஓட்டுநரிடம் தன்னிடம் சில்லறை இல்லை என்றும், வேண்டுமானால் நானே பணம் தருகிறேன் என்றும் அவர் கூறியும் அந்தப் பெண் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
मैडम ने दिल्ली में कैब बुक की। उसके बाद उनका बिल बना 199 रुपए का तो ड्राइवर से 1 रुपए मांगने लगी।😎
ड्राइवर बोला मैडम मेरे पास 1 रुपए नहीं है। मै आपको देता हूं पैसे आप ही कर दो इसी बात गरमा गर्मी बढ़ गई। pic.twitter.com/PFvr8tQYNB— सीतामढ़ी जिला 🇮🇳 (@SitamarhiJila) August 18, 2026
இந்தச் சில்லறைத் தகராறு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வைரலாகி வரும் நிலையில், பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே தினசரி நடக்கும் இத்தகைய சிறு பிரச்சினைகள் ஆன்லைன் நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. பணம் செலுத்துவதில் ஏற்பட்ட இந்தச் சிறிய தேவையற்ற விவாதம் குறித்த காட்சிகள் பலரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
