CRIME
அடிப்பாவி..! வளர்த்த பாவத்துக்கு இப்படியா… தாயின் தலையைத் துண்டித்து காதலனுடன் தப்பிய கொடூர மகள்..! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், தாய் மற்றும் மகளுக்கு இடையிலான புனிதமான உறவை சீர்குலைக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மீரட்டைச் சேர்ந்த உன்னதி என்ற பெண், தனது காதலன் ஆசிஷ் சௌஹானுடன் சேர்ந்து தனது வளர்ப்புத் தாயை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இவர்கள் இருவரும் காரின் உள்ளேயே வைத்து அந்தப் பெண்ணைக் கொலை செய்து, ஆதாயங்களை மறைக்கும் நோக்கில் அவரது தலையை உடலிலிருந்து துண்டித்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு, உடலை ஒரு சாக்குப்பையில் அடைத்து நள்ளிரவில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியின் மங்லோர் பகுதியில் உள்ள ஒரு கால்வாய் அருகில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். மங்லோரில் உள்ள பாசனத் துறை அலுவலகம் அருகே சாக்குப்பையில் தலையில்லாத உடல் இருப்பதைக் கண்ட உள்ளூர் மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி ஆதாரங்களைச் சேகரித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில், மீரட்டைச் சேர்ந்த வளர்ப்பு மகள் உன்னதி மற்றும் அவரது காதலன் ஆசிஷ் சௌஹான் ஆகியோரே இந்த கொடூர சம்பவத்தைச் செய்தது தெரியவந்தது. கொலையைச் செய்த பிறகு இருவரும் மலைப் பகுதிகளை நோக்கித் தப்பிச் சென்ற நிலையில், காவல்துறையினர் அவர்களைத் தீவிரமாகத் தேடிப் பிடித்துக் காவலில் எடுத்துள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தைக் கண்டறிய காவல்துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
