அட கடவுளே..! பெண்களை மயக்கிய ‘ரீல்ஸ்’ மீனவர்..! மனைவி கையும் களவுமாகப் பிடித்த அந்த ‘ஒரு’ ஆதாரம்.. கணவன் செய்த வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் பின்ணணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அட கடவுளே..! பெண்களை மயக்கிய ‘ரீல்ஸ்’ மீனவர்..! மனைவி கையும் களவுமாகப் பிடித்த அந்த ‘ஒரு’ ஆதாரம்.. கணவன் செய்த வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் பின்ணணி..!!

Published

on

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி சிவாவுக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த வெண்ணிலாவுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்து மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். இதனிடையே, இன்ஸ்டாகிராம் மூலம் பெங்களூருவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் சிவாவிற்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பும், அது தொடர்பான தனிப்பட்ட புகைப்படங்களை வெண்ணிலா பார்த்ததுமே இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெண்ணிலா, சிவாவின் செல்போனுடன் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார்.

மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்துச் செல்ல முயன்ற சிவாவுக்கு அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், சம்பவத்தன்று வியாசர்பாடியில் உள்ள அக்கா வீட்டுக்குச் சென்ற வெண்ணிலாவைத் தனியாக அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போதும் வெண்ணிலா சேர்ந்து வாழ மறுக்கவே, ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற சிவா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Advertisement

கொலைக்குப் பிறகு தலைமறைவான சிவா, மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்துவிட்டு பின்னர் வியாசர்பாடிக்கு வந்ததாகக் கூறப்படும் நிலையில், எம்.கே.பி. நகர் தனிப்படை போலீசார் அவரை அதிரடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். காவல் துறையினரின் விசாரணையில் தன் வழிக்கு வராத மனைவியை ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டியதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in