CRIME
அட கடவுளே.. கணவரே செய்த கொடூரம்.. குடியாத்தத்தில் தலைமை பெண் காவலருக்கு நேர்ந்த விபரீதம்.. குலைநடுங்க வைக்கும் பின்னணி..!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவரும், நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தவருமான தாமரைச்செல்வி, வியாழக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரது கணவரும் ஆட்டோ ஓட்டுநருமான அர்வின் என்பவரால் வழிமறிக்கப்பட்டுள்ளார். திருமணமாகி 13 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இவர்களுக்கிடையே இருந்து வந்த குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாக்குமுற்றில், அர்வின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாமரைச்செல்வியை கை, கழுத்து, தலை மற்றும் மார்புப் பகுதிகளில் சரமாரியாகக் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்தார்.
உடனடியாக அங்கிருந்த மக்களால் மீட்கப்பட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்; தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாகக் கொலையில் தொடர்புடைய கணவர் அர்வினை கைது செய்து விசாரணை நடத்தி வருவதுடன், பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
