LATEST NEWS
“பசிக்கு சோறு கேட்டா அடிப்பாங்கப்பா” என்னால முடியல… என் பையனும் அவன் பொண்டாட்டி பேச்ச தான் கேக்குறான்… மருமகளின் கொடுமையால் காவல் நிலையம் புகுந்த தாய்.. நெஞ்சை உருக்கும் சோகம்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலவுன் மாவட்டத்தில், மருமகளின் கொடுமையால் பசி, பட்டினியோடு காவல் நிலையத்திற்குத் தஞ்சம் புகுந்த முதிய தாய் ஒருவருக்குக் காவல் ஆய்வாளர் உணவளித்து உதவிய மனிதாபிமானச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாலவுன் மாவட்டத்தின் ஈட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோமாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த முதிய தாய். அவரது மருமகள் அவரைத் தொடர்ந்து மிகக் கொடூரமாக நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த முதியவர் பசிக்கு உணவு கேட்கும் போதெல்லாம், அவரது மருமகள் அவரைக் கடுமையான முறையில் தாக்கி வந்துள்ளார். ஒருகட்டத்தில், தனக்குத் தானே சமைத்துக் கொள்வதற்காகக் கொஞ்சம் மாவு கேட்டபோது கூட, அந்த மருமகள் கொஞ்சமும் இரக்கமின்றி அவரை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இத்தனை கொடுமைகள் நடந்தபோதிலும், பெற்ற தாய்க்கு ஆதரவாக நிற்க வேண்டிய மகன், எப்போதும் தனது மனைவியின் பக்கமே நியாயம் பேசி தாயைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
மருமகளின் தொடர் சித்திரவதையாலும் பசி, தாகத்தாலும் நிலைகுலைந்த அந்தத் தாய், இன்று ஈட் காவல் நிலையத்திற்கு அழுதுகொண்டே வந்து தஞ்சம் புகுந்தார். அங்கு பணியில் இருந்த காவல் நிலையப் பொறுப்பாளர் மிகுந்த கனிவோடு அவரை நடத்தினார். முதலில் பசியால் வாடிய அந்தத் தாய்க்கு அன்போடு உணவளித்த அவர், பின்னர் அவரது மருமகளைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, வயதான முதியவரைத் துன்புறுத்தியதற்காகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துக் கண்டித்தார்.
