CRIME
காதலும் போச்சு.. உயிரும் போச்சு..! குடும்பத் தகராறில் எல்லை மீறிய மனைவி.. ரொட்டி சுடும் கல்லால் கணவன் அடித்துக் கொலை.. நெஞ்சை உலுக்கும் சம்பவத்தின் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், கணவரை ரொட்டி சுடும் தோசைக் கல்லால் (தவா) தலை மற்றும் முகத்தில் கொடூரமாக அடித்துக் கொலை செய்த மனைவியின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆசிஷ் சோனி என்ற அந்த நபர், ஆட்டோ ரிக்ஷா ஓட்டி தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினருக்கு இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததால், இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணி குறித்துப் பேசிய ஆசிஷின் தாய், மருமகள் தபஸ்யா சிங் மீது அதிரடிப் புகார்களை முன்வைத்துள்ளார். ஆசிஷ் தன்னிடம் இருந்து தனியாக வாழ்ந்து வந்தபோதிலும், தபஸ்யா அவரைத் தினமும் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு வரவழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதோடு, பணம் தராவிட்டால் பொய் வழக்குகளில் சிக்க வைத்துவிடுவதாக மிரட்டியும் வந்துள்ளார்.
கொலையாளி தபஸ்யா ஒரு மசாஜ் பார்லரில் வேலை செய்து வந்ததாகவும், அவர் பல்வேறு சட்டவிரோத மற்றும் தவறான செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவரது மாமியார் குற்றம்சாட்டியுள்ளார். பணத்திற்காகத் தனது மகனைத் தொடர்ந்து மிரட்டி வந்த தபஸ்யா, இந்தத் தகராறில் தோசைக் கல்லால் ஆசிஷின் தலையில் பலமுறை பலமாகத் தாக்கியே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள லக்னோ காவல்துறையினர், தபஸ்யாவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
