நடுநடுங்க வைக்கும் கொடூரம்..! அதிமுகவில் இருந்து தவெக-விற்கு மாறிய சில நாட்களிலேயே சோகம்… ஓட ஓட விரட்டி பிரமுகர் வெட்டிக்கொலை… சிசிடிவி மூலம் 5 பேர் கூண்டோடு கைது..!! – cinefeeds
Connect with us

CRIME

நடுநடுங்க வைக்கும் கொடூரம்..! அதிமுகவில் இருந்து தவெக-விற்கு மாறிய சில நாட்களிலேயே சோகம்… ஓட ஓட விரட்டி பிரமுகர் வெட்டிக்கொலை… சிசிடிவி மூலம் 5 பேர் கூண்டோடு கைது..!!

Published

on

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க.வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வண்ணாந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களது கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கண்ணன் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சாஸ்திரி நகர் காவல்துறையினர், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் இந்த கொலையில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in