CRIME
நர்சிங் மாணவி மரண வழக்கில் அதிரடி திருப்பம்.. தலைமறைவான கல்லூரி முதல்வர் கைது.. காவல்துறை எடுத்த அதிரடி ஆக்ஷன்..!!
கேரளாவைச் சேர்ந்த அன்சிஜி என்ற நர்சிங் கல்லூரி மாணவி கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரியில் செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி, அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இவரைக் கடுமையாகக் கண்டித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த மாணவி அன்சிஜி, கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
கட்டிடத்திலிருந்து குதித்து பலத்த காயமடைந்த அன்சிஜி, உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகமான சம்பவத்தை அடுத்து, மாணவியின் மரணத்திற்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாகக் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
