“10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்…” சொன்ன சொல்லை காப்பாற்றிய அதிமுக நிர்வாகி.. தவெக வெற்றியால் நடந்த அதிரடி ட்விஸ்ட்.. உறைந்துபோன அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்…” சொன்ன சொல்லை காப்பாற்றிய அதிமுக நிர்வாகி.. தவெக வெற்றியால் நடந்த அதிரடி ட்விஸ்ட்.. உறைந்துபோன அரசியல் களம்..!!

Published

on

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் தனது மீசையை மழித்துக் கொள்வதாக நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரான பால. நந்தகுமார் முன்னதாக பகிரங்கமாக சவால் விடுத்திருந்தார். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தனது சவாலில் தோல்வியடைந்ததை நேர்மையுடன் ஏற்றுக்கொண்ட பால. நந்தகுமார், சவாலின்படி தனது மீசையை முழுமையாக மழித்துக்கொண்டுள்ளார்.

பால. நந்தகுமாரின் இந்த அரசியல் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. முன்னதாக கடந்த 2012-ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் இவர் நீலகிரி மாவட்டச் செயலாளராக முதன்முதலில் நியமிக்கப்பட்டார். எனினும், அரசியல் சூழ்நிலைகளால் சில நாட்களிலேயே அவர் அப்பதவியை இழக்க நேரிட்டது. அதன் பின்னர் அந்தப் பொறுப்பில் நீண்ட காலம் நீடித்த கப்பச்சி வினோத், சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். இதன் காரணமாக ஏற்பட்ட அரசியல் அதிரடி மாற்றங்களால், பால. நந்தகுமாருக்கு மீண்டும் நீலகிரி மாவட்டச் செயலாளர் பொறுப்பை அதிமுக தலைமை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in