CRIME
“ஐயோ கடவுளே..!” 27 குத்துகளுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பள்ளி இயக்குனர்.. 10 ஆம் வகுப்பு மனைவியின் வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் த்ரில்லர் பின்னணி
தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டம் கொண்டமல்லேபள்ளி மண்டலத்தில் உள்ள நாகார்ஜுனா பள்ளியின் இயக்குநரும் ஆசிரியருமான கல்லு ரூபா ரெட்டி, கடந்த வாரம் தனது இல்லத்தில் பல கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்ததாக ஆகஸ்ட் 19, புதன்கிழமை அன்று காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்தபோது அவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில், ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர் தனது தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்காததால் அண்டை வீட்டாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். அண்டை வீட்டார் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறை குழு, பாதிக்கப்பட்டவரின் வயிறு மற்றும் கழுத்தில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களால் பல குத்தப்பட்ட காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தது.
இச்சம்பவம் தொடர்பாக 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கொலைக்கான நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு 27 கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டதாக வரும் செய்திகள் குறித்த கேள்விக்கு, அவருக்குப் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சரியான எண்ணிக்கை உறுதி செய்யப்படும் என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். பாதிக்கப்பட்டவரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் கொண்டமல்லேபள்ளி காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
