அடிப்பாவி..! இவன் இன்னும் சாகலையா.? கணவனுக்கு ஆசிட் ஊசி போட்டு.. கள்ளகாதலனோடு சேர்ந்து மனைவி செய்த் கொடூரம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடிப்பாவி..! இவன் இன்னும் சாகலையா.? கணவனுக்கு ஆசிட் ஊசி போட்டு.. கள்ளகாதலனோடு சேர்ந்து மனைவி செய்த் கொடூரம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, நரம்பு வழி மருந்து செலுத்தும் குழாயில் டாய்லெட் கிளீனர் மற்றும் ஆசிட்டை ஊசி மூலம் செலுத்தி செவிலியர் கொடூரமாக கொலை செய்துள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து அண்மையில் ஊர் திரும்பிய கணவர் பிரசாந்த் (35) என்பவரைக் கொலை செய்ததாக, அவரது மனைவி சந்தியா (32), கள்ளக்காதலன் அனில் மற்றும் நண்பர் வெங்கட் சாய் ஆகிய 3 பேரை நிஜாமாபாத் ரூரல் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரசாந்துக்கு அதிகளவில் மது ஊற்றிக் கொடுத்து மயக்கமடையச் செய்த அனில் மற்றும் அவனது நண்பர், பிரசாந்தை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர் . ஆனால், அவர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டதால், குடிபோதையில் தவறி விழுந்துவிட்டதாக நாடகமாடி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு, அங்கேயே அவருக்கு குளுகோஸ் மற்றும் மருந்துகள் செலுத்தப்பட்டு வந்துள்ளன.

Advertisement

கணவர் உயிர் பிழைத்ததால் தங்களின் கள்ளக்காதல் விவகாரம் வெளியாகிவிடும் என அஞ்சிய சந்தியா, தனது மருத்துவப் பின்புல அறிவைப் பயன்படுத்தி மரணத்தை விளைவிக்கும் இரண்டாவது திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். பிரசாந்தின் கையில் பொருத்தப்பட்டிருந்த கானுலா (Cannula) குழாய் வழியாக தூக்க மாத்திரைகளைத் தூளாக்கி, அதனுடன் கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட் திரவத்தைக் கலந்து ஊசி மூலம் செலுத்தி படுகொலை செய்துள்ளார் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ். பிரசாந்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கொடூர சதி அம்பலமாகி, மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in