LATEST NEWS
பரபரப்பு..! பள்ளி மாணவியை அவமானப்படுத்திய விவகாரம்.. நள்ளிரவில் திமுக கொடுத்த ஷாக் … அதிர்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா..!!!
அரசுப் பள்ளி மாணவியை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியதாக தமிழக அமைச்சர் கீர்த்தனா மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் திமுக எம்பி சல்மா புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அரசுப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டபோது மாணவியின் ஆங்கில அறிவைச் சோதிப்பதாகக் கூறி நடத்திய உரையாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில், அமைச்சர் கீர்த்தனா பொது மக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஒரு குழந்தையை அவமதிக்கும் வகையில் நடத்தியுள்ளார் என்று திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில், அவரது முக அடையாளத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரின் இந்த செயல் குழந்தைகளின் பாதுகாப்புச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் வகையில் அமைந்துள்ளதாக சல்மா எம்பி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அவமானப்படுத்தப்பட்ட குழந்தையின் அடையாளத்தை மறைக்காமல், சமூக வலைதளங்களில் “ரீல்ஸ்” மற்றும் வீடியோவாகப் பரப்பப்பட்டுள்ளது என்று புகாரில் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
