LATEST NEWS
BREAKING: இரவோடு இரவாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஷாக்.. நீதிமன்றம் போட்ட அதிரடி உததரவு..!!
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்திருந்தார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காவல்துறைக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர்களின் பேச்சுகள் வழக்கின் சாட்சிகளையும் விசாரணையையும் பாதிக்கும் என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. [
இதே விவகாரத்தில் முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெகவினர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கத் தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த இடையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையின் போது உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் திமுக தரப்பு இந்த மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து அது தள்ளுபடி செய்யப்பட்டது. தவெக அமைச்சர்களின் கருத்துகளால் வழக்கின் விசாரணையில் தாக்கம் ஏற்படும் என திமுக வாதிட்ட நிலையில், தனியாக அவமதிப்பு வழக்கு தொடரும் அனுமதியுடன் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
