LATEST NEWS
திமுக ஆட்சியில் ‘டாப்’… இப்போது டம்மி… IAS உதயச்சந்திரனிடமிருந்து கைமாறிய பொறுப்பு… தமிழக அரசு அதிரடி…!!
தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநராக இருக்கும் ஜெயசீலன் ஐஏஎஸ் (IAS), தற்போது தொல்லியல் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்பு வரை தொல்லியல் துறையின் இயக்குநர் பதவியைக் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தவர் உதயச்சந்திரன் ஐஏஎஸ். திமுக ஆட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க அதிகாரியாக விளங்கிய இவர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நிதித்துறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
தொல்லியல் துறைக்குப் புதிய அடையாளத்தை வழங்கிய பெருமைக்குரிய உதயச்சந்திரனிடமிருந்து தற்போது இப்பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் உதயச்சந்திரனின் நட்பு வளையத்தில் இருந்தவர்களுக்கே முக்கிய பதவிகள் வழங்கப்பட்டதாகவும், இதனால் திறமையான அதிகாரிகள் பாதிக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில் இந்த மாற்றம் நடந்துள்ளது.
