CINEMA
“தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா…” ஆசை காட்டி பைனான்ஸ் அதிபரை நிர்வாணமாக்கி… திருப்பத்தூர் கவிதா செஞ்ச வேலை… ரூ.50 லட்சத்திற்கு நடந்த ஸ்கெட்ச்..!!!
திருப்பத்தூர் பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பைனான்ஸ் அதிபர் வடிவேல், செல்போன் மூலம் அறிமுகமான கவிதா என்ற பெண்ணின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து, நிர்வாணமாக்கி மிரட்டப்பட்ட சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் வடிவேலைத் தொடர்பு கொண்ட கவிதா, தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி ரூ.4,500 வாங்கியுள்ளார். தொடர்ந்து பேசியதில் இருவருக்கும் நெருக்கம் ஏற்படவே, காரைக்குடிக்கு வந்தால் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என கவிதா வடிவேலுக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பி ஜூன் 24 அன்று காரைக்குடி சென்ற வடிவேலை, கவிதா ஒரு பழைய ஓட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் வடிவேலைத் தாக்கி, கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கி, ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதோடு, அவரது பைக் மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளது.
பாதிக்கப்பட்ட வடிவேல் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். தீவிர விசாரணையின் முடிவில், இந்த நூதனப் பறிப்பில் ஈடுபட்ட கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
