CINEMA
BREAKING: இளையராஜா பாடலை பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.. சற்றுமுன் பரபரப்பு உத்தரவு..!!
‘முரட்டுக் காளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற ‘பொதுவாக எம் மனசு தங்கம்’ என்ற பாடலை, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உரிய அனுமதி பெறாமல் தங்களது பழைய பாடல்களைத் திரைப்படங்களில் மறுபதிப்பு செய்தோ அல்லது மாற்றி அமைத்தோ பயன்படுத்துவதற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது அனுமதியின்றி ‘பொதுவாக எம் மனசு தங்கம்’ பாடலை உருமாற்றி ‘ஹேப்பி ராஜ்’ படத்தில் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். காப்புரிமைச் சட்டத்தின்படி முறையான அனுமதி பெறாமல் பாடலைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்பதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாடலைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
