CINEMA
ரஜினி முகத்தில் காரி துப்பிய இயக்குநர் பாரதிராஜா…! 16 வயதினிலே படப்பிடிப்பில் நடந்த அதிரடி உண்மை சம்பவம்…!!
தமிழ் சினிமாவின் மிக முக்கிய மைல்கல்லான “16 வயதினிலே” திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான உண்மைச் சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த நிகழ்வைப் பகிர்ந்துள்ளதார்.
இப்படத்தில் ரஜினிகாந்தின் முகத்தில் காரித் துப்பும் ஒரு முக்கியமான காட்சி படமாக்கப்பட வேண்டியிருந்தது. இதற்காக, சோப்பு நுரையைப் பயன்படுத்தி பலமுறை ஸ்ரீதேவி ரஜினியின் முகத்தில் தெளித்தும், இயக்குநருக்குத் தேவையான சரியான காட்சி அமையவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ரஜினிகாந்த், “உண்மையாகவே என் முகத்தில் துப்புங்கள்” என்று ஸ்ரீதேவியிடம் கூறியுள்ளார். ஆனால், ஒரு சக நடிகரின் முகத்தில் துப்ப ஸ்ரீதேவி முற்றிலும் மறுத்துவிட்டார்.
ஸ்ரீதேவி மறுத்ததைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநரான பாரதிராஜாவையே அந்தத் துப்பும் காட்சியைச் செய்யுமாறு ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். இயக்குநரும் சற்று தயங்கியபடியே, காட்சியின் யதார்த்தத்திற்காக ரஜினிகாந்தின் முகத்தில் காரித் துப்பியுள்ளார். இந்த நிகழ்வை அப்போது அருகில் இருந்து நேரடியாகப் பார்த்தவர் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாக்யராஜ் என்று வைரமுத்து தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
