CINEMA
மீனாவை தயவு செஞ்சு விட்டுடுங்க, கவிஞர் வைரமுத்துவிடம் கையெடுத்து கும்பிட்ட இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், முத்து படம் எடுத்த போது இப்படியும் ஒரு சம்பவம் நடந்ததா? நீண்ட நாட்களுக்கு பின் உண்மையை போட்டுடைத்த கேஎஸ்ஆர்!
கடந்த 1995ம் ஆண்டில் வெளியான நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் வரும் தில்லானா தில்லான பாடல் ரொம்பவும் பிரபலம். இந்த பாடலை எழுதும்போது நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம் குறித்து படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது கூறியதாவது, தில்லானா தில்லானா என்ற இந்த பாடலில் முதலில் தமிழ்நாட்டு மக்கள் கூட்டம் உன்னோடு தானே, நான் மட்டும் தள்ளி நிற்பேனா என்று எழுதியிருந்தார் வைரமுத்து. இதெல்லாம் வேண்டாம் சார் புதுசா எதாவது எழுதுங்க என்று நான் சொன்னபோது, அவர் கூட்டம் கூட்டம் என்றே எழுதினார். நான் கடைசியாக இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.
இதை கேட்டு டென்ஷன் ஆன கவிஞர் வைரமுத்து, எதுவுமே வேண்டாம் வேண்டாம் என்று நீங்கள் சொன்னால், தில்லானா தில்லானா என்று தான் எழுத வேண்டும் என்று சொன்னார். அதை கேட்டவுடன் இது சூப்பரா இருக்கே என்று அதையே வைத்துக்கொண்டோம். அதன்பிறகு மீனா பெயரை அந்த பாடலில் சேர்த்தார். ஆனால் ஏற்கனவே நாட்டாமையில் மீனா பொண்ணு என்ற பாடல் போட்டாச்சு. இதில் வேண்டாம் என்று சொன்னேன். அதன்பிறகு தில்லானா தில்லான நீ தித்திக்கின்ற மீனா என்று எழுதினார். நான் கையெடுத்து கும்பிட்டு மீனா வேண்டாம் சார் மீனாவை விட்டுடுங்க என்று சொல்ல, அதன்பிறகுதான் நீ தித்திக்கின்ற தேனா என்று வைரமுத்து மாற்றி எழுதினார் என்று கே.எஸ்.ரவிக்குமார் அதில் கூறியுள்ளார்.
