CINEMA
ரஜினி நடித்த அந்த படமும் கமல் நடித்த இந்த படமும் பார்த்த மாதிரி தர்மன் படம் இருக்கும், கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் குறித்த முக்கிய அப்டேட், சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து!
சென்னையில் நடந்த தர்மன் பட துவக்க விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறியதாவது, இந்த படத்தில் ரஜினிகாந்த் டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார். ஆனால் 5 ரூபாய் டாக்டர் கேரக்டர் என்ற தகவல் பரவியது. ஆனால் அப்படி ஒரு கேரக்டரில் அவர் நடிக்கவில்லை. நமக்கு ரஜினி சார் நடித்த படையப்பா படம் மிகவும் பிடிக்கும். அதே போல் கமல் சார் நடித்த வேட்டையாடு விளையாடு படமும் ரொம்ப பிடிக்கும். இந்த தர்மன் படம் அந்த 2 படங்களின் சாயலோடு இருக்கும். அப்படி என்றால் எப்படி படம் இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
இது ஒரு குடும்ப படம். ஜாலியான பொழுதுபோக்கு படம். திரில்லிங் நிறைந்த படமாகவும் இருக்கும். ரஜினி சாரை பொருத்த வரை இந்த படத்தை கமல் சார் தயாரிக்கிறார். படம் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப என்னிடம் வலியுறுத்தி கூறினார். கமல் சாரும் இந்த படத்துக்கான முழு ஒத்துழைப்பு தந்திருக்கிறார். அவர்கள் இருவரும் இன்னும் ஜெயிக்க காரணம், இது அவர்களது முதல் படம் போல ஆர்வமும் ஈடுபாடும் காட்டுகின்றனர். அதுதான் அவர்கள் இவ்வளவு பெரிய ஜாம்பவான்களாக ஜெயிக்க காரணம் என்று நான் கருதுகிறேன் என்று இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து விழாவில் பேசினார்.
