CINEMA
தர்மன் படத்தின் துவக்க விழா, ரஜினி முகம் மாறியதற்கு அதுதான் காரணமா? சூப்பர் ஸ்டாருக்கே இப்படி ஒரு சங்கடமா? தயாரிப்பாளர் கமல்ஹாசன் இதை கொஞ்சம் கவனிச்சிருக்கலாமே? புலம்பும் ரசிகர்கள்!
சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் முகம் மாறியதற்கு காரணம் அதுதான் என்று அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தர்மன் என்ற படம் உருவாகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.
இந்த படத்தில் சிம்ரன் ராஷி கண்ணா மீனாட்சி சவுத்ரி என 3 நடிகைகள் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் தர்மன் படத்தின் துவக்க விழா நடந்தது. அது எங்கு நடந்தது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் 10க்கு 10 என்ற அளவில் உள்ள சின்ன இடத்தில் இந்த துவக்க விழா நடந்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் முகத்தில் ஒரு ஏமாற்றமும் வருத்தமும் தெரிந்தது.
இப்படிப்பட்ட ஒரு சிறிய இடத்தில் அந்த துவக்க விழா நடந்தது அவருக்கு பலத்த ஏமாற்றம் தந்துள்ளது. அது பிடிக்காததால் தான் அவர் முகம் வாடிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எளிமையாக இந்த விழாவை நடத்த வேண்டும் என்று தான் தயாரிப்பாளரான கமல்ஹாசன் அந்த இடத்தை தேர்வு செய்தார் என்றும் கூறப்படுகிறது. எனினும் தனது நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு புதிய படத்தின் துவக்க விழாவை மிகப் பிரமாண்டமாக தான் நடத்தி இருக்க வேண்டும். இப்படி கார் பார்க்கிங் பகுதியில் நடத்தியது ஏமாற்றம்தான் என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
