தனது மாஜி மாமனார் ரஜினிகாந்துடன் மோத தயாரான மருமகன் தனுஷ் – கடைசி நேரத்தில் அப்படி முடிவுக்கு வந்து விட்டாரா? ஓம் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்! – cinefeeds
Connect with us

CINEMA

தனது மாஜி மாமனார் ரஜினிகாந்துடன் மோத தயாரான மருமகன் தனுஷ் – கடைசி நேரத்தில் அப்படி முடிவுக்கு வந்து விட்டாரா? ஓம் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

Published

on

actor dhanush

நடிகர் தனுஷின் முன்னாள் மாமனார் நடிகர் ரஜினிகாந்த். எனினும் ரஜினி படம் ரிலீஸாகும் நேரங்களில் தலைவா என்று குறிப்பிட்டு தனுஷ் தனது வலைதள பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தனது குருவான ஜெயிலர் 2 படம் வெளியாக உள்ளதால் தனது படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் தள்ளி வைத்ததாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த படம் ஓம். இந்த படத்தை வருகிற அக்டோபர் 16ம் தேதி ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழு தரப்பில் திட்டமிட்டனர்.

 

Advertisement

ஆனால் அதே நாளில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல் நடிகர் தனுஷூக்கு கிடைத்த நிலையில் ஓம் படத்தை ரஜினிக்கு போட்டியாக அந்த நாளில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அவர் தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். அதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6ம் தேதி ஓம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in