தர்மன் படத்தில் 3 கதாநாயகிகளா? விஜய் பட நடிகையும் நடிக்கிறாரா? இது வேற லெவல் சம்பவமா இருக்குதே… அப்போ இதுவும் மல்டி – ஸ்டார் கதைக்களத்தில் உருவாகிறதா? காத்திருக்கும் டிவிஸ்ட்! – cinefeeds
Connect with us

CINEMA

தர்மன் படத்தில் 3 கதாநாயகிகளா? விஜய் பட நடிகையும் நடிக்கிறாரா? இது வேற லெவல் சம்பவமா இருக்குதே… அப்போ இதுவும் மல்டி – ஸ்டார் கதைக்களத்தில் உருவாகிறதா? காத்திருக்கும் டிவிஸ்ட்!

Published

on

Dharman

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் டாக்டர் கேரக்டரில் நடிக்கும் தர்மன் படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் நடிகை சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகை ராஷி கண்ணாவும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இப்போது இன்னொரு நடிகையும் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அவர் நடிகை மீனாட்சி சவுத்ரி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் போன்ற படங்களில் நடித்தவர். தெலுங்கில் சங்கராந்தி வஸ்துனம் படத்திலும் நடித்திருந்தார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருந்த ஒரு படத்தில் கதாநாயகியாக கமிட் செய்யப்பட்டவர் மீனாட்சி சவுத்ரி. இப்போது அந்த படம் இயக்குவது தள்ளிப் போனதால் அந்த படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகையை தர்மன் படத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நடிக்க செய்திருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in