CINEMA
ஜெயிலர் 2 படம் ரிலீஸ் எப்போது? திடீரென முடிவை மாற்றிய சன் பிக்சர்ஸ் நிறுவனம், அப்போ இந்தமுறை சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி இல்லையா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே அந்த படம் வெளியாகும் என்று இப்போது லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் முதலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட ஜெயிலர் 2 படம் பிறகு செப்டம்பர் மாதம் ரிலீஸ் என தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு தீபாவளிக்கு தான் இந்த படம் ரிலீஸ் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அக்டோபர் 16ம் தேதி ஜெயிலர் 2 படம் ரிலீஸ் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தை அக்டோபர் 16ம் தேதி ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்க தொடங்கியுள்ள தருமன் படம் அடுத்த 2027ம் ஆண்டில் திரைக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
