ஒரு நடிகர் முதலமைச்சர் ஆகி விட்டார், அதனால் விஜய் அமைச்சரவையில் கோமாளிகளை தான் எதிர்பார்க்க முடியும் – கடுமையாக விமர்சனம் செய்த பிரபலம்! – cinefeeds
Connect with us

CINEMA

ஒரு நடிகர் முதலமைச்சர் ஆகி விட்டார், அதனால் விஜய் அமைச்சரவையில் கோமாளிகளை தான் எதிர்பார்க்க முடியும் – கடுமையாக விமர்சனம் செய்த பிரபலம்!

Published

on

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயை ஆரம்பத்திலிருந்து கடுமையாக விமர்சித்து வந்தவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இப்போது விஜய் தமிழக முதல்வரான பிறகும் தொடர்ந்து அவரை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஜேம்ஸ் வசந்தன் தவெக ஆட்சியை கோமாளிகளின் ஆட்சி என்று பேசியிருக்கிறார்.

அந்த நேர்காணலில் பேசிய ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது, விஜயின் அமைச்சர்களை, அமைச்சர்களாக ஏற்க மனசு தயங்குகிறது. இவர்கள் யாரும் மக்கள் சேவைக்காக வந்தவர்கள் இல்லை. போஸ்டர் ஒட்டியவர்கள் பிளாக் டிக்கெட் விற்றவர்கள் தியேட்டரில் விசில் அடித்தவர்கள் தான் இப்போது அமைச்சர்களாக உள்ளனர். அவர்களது பெயர் என்னவென்று விஜய்க்கே தெரியாது. ஒரு நடிகர் முதலமைச்சர் ஆனதால் உருவான இந்த அமைச்சரவையிடம் இருந்து கோமாளிகளை தான் எதிர்பார்க்க முடியும் என்று ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in