தமிழக அரசியலில் அடுத்த மாற்றம்..! திடீர் கொடி… மாஸ் பிளான்..! விஜய் ஸ்டைலில் களம் இறங்குகிறாரா தனுஷ்..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழக அரசியலில் அடுத்த மாற்றம்..! திடீர் கொடி… மாஸ் பிளான்..! விஜய் ஸ்டைலில் களம் இறங்குகிறாரா தனுஷ்..?!

Published

on

நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ-மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகையையும், பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷின் ரசிகர்கள் கூறுகையில், தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்காக வெள்ளை – சிகப்பு நிறத்தின் நடுவில் நட்சத்திரம் குறிக்கப்பட்டு, அதன் நடுவே தனது உருவப்படம் பொறிக்கப்பட்ட புதிய கொடியை அறிமுகப்படுத்தியதாகத் தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய் வழியில் தானும் அரசியல் கட்சி தொடங்குவதற்கான திட்டத்துடன் தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை மாநிலம் முழுவதும் ஒருங்கிணைத்து வருவதாகக் குறிப்பிட்டனர்.

Advertisement

விரைவில் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாகச் சென்று ரசிகர்களைச் சந்தித்து, மன்றங்கள் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கான திட்டத்தை அவர் வகுத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, வரும் 2031-ம் ஆண்டுக்குள் நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in