CINEMA
புஷ்பா பட காப்பியா ‘ஓம்’?…தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்…இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்…தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வருகிறதா தனுஷின் ‘ஓம்’?…
‘அமரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஓம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனுஷின் 55-வது படமான (D55) இத்திரைப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். நேற்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் ஸ்டிரைக்’ வெளியீட்டு விழாவில், பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல அதிரடியான கேள்விகளுக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மிகவும் நிதானமாகவும் அழகாகவும் பதிலளித்துள்ளார்.
‘ஓம்’ படத்தின் அறிமுக வீடியோவில் மரம் வெட்டும் தொழிலாளர்களை நாயகன் காப்பாற்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால், இது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் பாதிப்பா அல்லது காப்பியா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர், “இது வெறும் டைட்டில் இன்ட்ரோ வீடியோ மட்டும்தான்; நீங்கள் குறிப்பிடும் புஷ்பா படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று மறுத்தார். மேலும், திருவண்ணாமலையில் இருந்து மரம் வெட்டச் சென்றவர்களுக்கு நேர்ந்த உண்மைச் சம்பவத்தின் தாக்கம் இப்படத்தில் இருக்கும் என்றும், படத்தில் பல கதைக் களங்கள் (layers) உள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும்போது ரசிகர்களுக்கு முழு விவரமும் புரியும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
சிவபக்தரான தனுஷின் நிஜ வாழ்க்கையோடு ஒத்துப்போகும் வகையில், இப்படத்தின் வீடியோவிலும் அவரை “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்று மக்கள் போற்றுவது போன்ற மாஸான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில திரைப்படங்கள் தனுஷுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், 300 கோடி வசூல் சாதனை படைத்த ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் தனுஷ் கைகோர்த்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அமரன்’ திரைப்படத்தைப் போலவே இந்த ‘ஓம்’ திரைப்படமும் தனுஷின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் பிளாக்பஸ்டர் படமாக அமையும் என திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
