CINEMA
நடிகருக்கு கார் பரிசா.?யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனோபாலா..!வைரலாகும் தகவல்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு, மறைந்த மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான மனோபாலா குறித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். ஒருமுறை மனோபாலா தான் புதிதாக வாங்கிய காரில் யோகி பாபுவை ஏற்றிக்கொண்டு ரைடு சென்றுள்ளார். அப்போது அந்த கார் மிகவும் அருமையாக இருக்கிறது என்று யோகி பாபு இயல்பாகக் கூறியுள்ளார். அவர் சாதாரணமாகச் சொன்ன அந்த வார்த்தையை மனதில் குறித்து வைத்துக்கொண்ட மனோபாலா, மூன்றே நாட்களில் யோகி பாபுவுக்கு போன் செய்து, “உனக்கும் இதே காரை புக் செய்துவிட்டேன், நேரில் வந்து வாங்கிக்கொள்” என்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்த எதிர்பாராத சர்ப்ரைஸைக் கேட்டுத் தனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என யோகி பாபு நெகிழ்ந்துள்ளார். ஒரு பொருளைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று யாராவது சொன்னால், உடனே அதை அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் பரந்த மனம் எல்லோருக்கும் வந்துவிடாது என்று மனோபாலாவின் நற்குணத்தை அவர் வியந்து பாராட்டியுள்ளார். சினிமாவில் தான் வளரத் தொடங்கிய காலத்திலிருந்தே தன் மீது அதிக அக்கறையும் அன்பும் காட்டியவர் மனோபாலா என்றும், அவரைப் போன்ற ஒரு சிறந்த மனிதரைத் தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது என்றும் யோகி பாபு உணர்ச்சிப்பொங்கத் தெரிவித்துள்ளார்.
