CINEMA
40 வருட காத்திருப்பு..! ரஜினி-கமல் கூட்டணியில் ‘தர்மன்’…அஷ்வத் மாரிமுத்து போட்ட மாஸ்டர் பிளான்… இணையதளத்தில் பரபரப்பு தகவல்…!!
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் இமயங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் மீண்டும் இணைந்துள்ளனர். கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இளம் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இதுமட்டுமின்றி, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் மற்றொரு படத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ள செய்தியும் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
பல முன்னணி இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், இறுதியாக இந்த மெகா ப்ராஜெக்ட்டை இயக்கும் வாய்ப்பை அஷ்வத் மாரிமுத்து பெற்றுள்ளார். இந்தப் படத்தை ஒரு மிகப்பெரிய பொறுப்பாகக் கையில் எடுத்துள்ள அவர், ‘படையப்பா’ படத்தின் மாஸ் மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் கிளாஸ் ஆகிய இரண்டும் கலந்த ஒரு அட்டகாசமான விருந்தாக இப்படம் இருக்கும் என உறுதியளித்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக முன்னணி நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளதாகவும், ராஷி கண்ணா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் பாடலுக்கான நடன இயக்கத்தை சாண்டி மாஸ்டர் மேற்கொள்கிறார்.
‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. சூப்பர் ஸ்டாரின் வசதியைக் கருத்தில் கொண்டு, படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளார். தேவைப்பட்டால் மட்டுமே ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்களாம். படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் தனது தனித்துவமான ஸ்டைலில் காரிலிருந்து இறங்கி நடந்து வருவதைப் பார்த்ததும், தான் ஒரு இயக்குநர் என்பதை மறந்து தீவிர ரசிகராக விசிலடித்து விட்டதாக அஷ்வத் மாரிமுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சுவாரஸ்யமான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.
