CINEMA
“பிக்பாஸ் பிரபலம் திவாகர் திடீர் கைது.. யூடியூப் ஊழியர் கொடுத்த பகீர் புகார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்”..!!
சமூக வலைத்தளங்களில் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என்று பிரபலமாக அறியப்பட்டவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான திவாகரை இரண்டு பிரிவுகளின் கீழ் கீழ்ப்பாக்கம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், திவாகர் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வருவதாகக் காவல்நிலையத்தில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், திவாகர் தன்னிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
யூடியூப் ஊழியரின் புகாரைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணை நடத்திய கீழ்ப்பாக்கம் போலீசார் திவாகர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று அவர் போலீசாரால் முறைப்படி கைது செய்யப்பட்டுள்ளார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பிக்பாஸ் பிரபலம், பணப் பறிப்பு மற்றும் மிரட்டல் வழக்கில் திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
