LATEST NEWS
.எ.வ.வேலுவின் திடீர் சென்னை விசிட்.. நாளை லஞ்ச ஒழிப்புத்துறைவிசாரணைக்கு ஆஜராவாரா?.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், மருத்துவச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றிருந்த அவர் இன்று சென்னை திரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இதே விசாரணைக்காக ஜூலை 3-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகச் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் கடிதம் அளித்து அவகாசம் கோரியிருந்தனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அவர் நாளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
சமீபத்தில் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், சாலை அமைக்காமலேயே பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகக் கூறி, திமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அஞ்சி சிங்கப்பூருக்கு ஓடிச் சென்று சிகிச்சை நாடகமாடுவதாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். தமிழக முதல்வரின் இந்த நேரடித் தாக்குதலுக்கு எ.வ.வேலு தரப்பில் “பழிவாங்கும் நடவடிக்கை” என மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய அரசியல் மோதல்களும், வழக்குகளும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள தற்போதைய சூழலில், எ.வ.வேலுவின் சென்னை வருகையும், அவர் நாளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகப் போகும் விவகாரமும் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
