“யாராவது இப்படி செய்வாங்களா..?!” ரயிலில் நடந்த கூத்தைப் பார்த்து வாயடைத்துப் போன பயணிகள்..! மில்லியன் வியூஸ்களைக் குவிக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாராவது இப்படி செய்வாங்களா..?!” ரயிலில் நடந்த கூத்தைப் பார்த்து வாயடைத்துப் போன பயணிகள்..! மில்லியன் வியூஸ்களைக் குவிக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

இணையத்தில் தற்போது ஒரு வீடியோ மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது, அதைப் பார்த்தால் நீங்களும் உங்கள் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த வீடியோவில், நபர் ஒருவர் ரயிலின் ஜெனரல் பெட்டியில் வீட்டிலிருந்து கொண்டு வந்த பெரிய ஸ்டாண்ட் ஃபேன் உடன் ஏறி, கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அதை ரயிலின் சார்ஜிங் பாயிண்டில் செருக முயல்கிறார். இந்த விசித்திரமான காட்சியைக் கண்டு அருகில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த சிலர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது வைரலாகி நெட்டிசன்களிடையே பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைப் பெற்று வருகிறது.

இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தாலும், ரயிலில் இதுபோன்று செய்வது உங்களுக்கும் மற்ற பயணிகளுக்கும் ஆபத்தாக முடியக்கூடும். ஏனெனில், வீட்டில் பயன்படுத்தும் மின்விசிறிகள், ஹீட்டர்கள் அல்லது இண்டக்ஷன் போன்ற சாதனங்கள் 230 வோல்ட் மின்சாரத்தில் இயங்குபவை. ஆனால், ரயிலில் உள்ள சார்ஜிங் பாயிண்டுகள் மொபைல், லேப்டாப் மற்றும் டேப்லெட் போன்ற சிறிய எலக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்ய மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய அதிக திறன் கொண்ட சாதனங்களை சார்ஜிங் சாக்கெட்டில் சொருகும்போது, வயரிங் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டு ஃபியூஸ் போவதற்கோ அல்லது ஷார்ட் சர்க்யூட் ஆகி தீப்பிடிப்பதற்கோ அதிக வாய்ப்புள்ளது.

Advertisement

இந்திய ரயில்வே விதிகளின்படி, ரயில் பயணத்தின் போது பயணிகள் மொபைல் போன், டேப்லெட் அல்லது பவர் பேங்க் மட்டுமே சார்ஜ் செய்ய அனுமதி உள்ளது. மேலும், சில குறிப்பிட்ட மற்றும் அதிக திறன் கொண்ட பெட்டிகளில் லேப்டாப் சார்ஜ் செய்யவும் வசதி உண்டு. பயணத்தின் போது இதுபோன்ற அலட்சியமான செயல்களில் ஈடுபட வேண்டாம், ஏனெனில் உங்களின் ஒரு சிறிய தவறு ரயிலில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரக்கே ஆபத்தாக மாறக்கூடும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in