LATEST NEWS
Breaking: அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு புதிய பொறுப்பு… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!
தவெக ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியை விரிவுபடுத்தி, புதிய நிர்வாகிகளை கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த வைகைச் செல்வன், கலைராஜன் மற்றும் புகழேந்தி ஆகிய மூவருக்கும் புதிய முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கட்சியின் செய்தித் தொடர்புப் பிரிவு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தலைமை நிலையச் செயலக முதன்மை செய்தித் தொடர்பாளர்களாக CTR நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய மாற்றங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியில், தற்பொழுது மொத்தம் 29 நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்
