LATEST NEWS
“வரலைனா ஆசிட் ஊற்றிடுவேன்..! 19 வயது மாணவியை மிரட்டி.. கழுத்தில் கயிறு கட்டிய 32 வயது ஆசாமி..! சேப்ரோலுவில் அதிர்ச்சி சம்பவம்..!!”
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் சுண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, சேப்ரோலு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான சிவ கோடேஸ்வர ராவ் என்பவர், கடந்த சில நாட்களாக அந்த மாணவியைப் பின்தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால், அந்த மாணவி அவரது காதல் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இச்செய்தி வீட்டில் தெரிந்தால் தனது படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்ற பயத்தில், மாணவி இதுகுறித்து தன் பெற்றவரிடம் தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜூலை 18 அன்று, சிவ கோடேஸ்வர ராவ் அந்த மாணவியைத் தொடர்பு கொண்டு, சேப்ரோலுவில் உள்ள பிரம்மா கோயிலுக்கு உடனடியாக வர வேண்டும் என்றும், வரவில்லையெனில் இருவரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி, அவரைச் சந்திக்க கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து கோடேஸ்வர ராவ் மாணவியின் கழுத்தில் கயிற்றைக் கட்டி, புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தன் பெற்றவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மாணவியின் தந்தை சிவ கோடேஸ்வர ராவ் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சேப்ரோலு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
