பாஸ் கனவுல கூட நினைக்காதீங்க..! “ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேறாது..” அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த பகீர் மிரட்டல்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாஸ் கனவுல கூட நினைக்காதீங்க..! “ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேறாது..” அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த பகீர் மிரட்டல்…!!

Published

on

அமெரிக்கா விதிக்க திட்டமிட்டுள்ள புதிய பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருந்து ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி முடக்குவோம் என ஈரான் நாடு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ‘ECONOMIC D-DAY’ என்ற பெயரில் ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக முடக்கும் வகையிலான நடவடிக்கைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோக வழித்தடங்களை முற்றிலுமாக முடக்குவோம் என ஈரான் இந்த மிரட்டலை விடுத்துள்ளது.

முக்கியமாக, சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீர்ச்சந்தி , ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் ஆகிய வழித்தடங்களின் வழியாக ஆசிய நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை இலக்கு வைத்து ஈரான் இந்த எச்சரிக்க வரைபடத்தை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்து சர்வதேச சந்தைக்குச் செல்லும் எண்ணெய் விநியோகத்தை முழுமையாகத் தடுப்பதே ஈரானின் இந்த மிரட்டலின் முக்கிய நோக்கமாகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in