LATEST NEWS
“போடா.. ஆண்டவனே நம்ம பக்கம்… கதவுகளைத் திறந்த கர்நாடகா… தமிழக எல்லையில் மாஸ் என்ட்ரி.. குஷியில் டெல்டா மாவட்டங்கள்..!!
கேரள மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது. அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் நீர திறப்பு மேலும் உயர்த்தப்படக்கூடும். இதனால் ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகளால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் இந்த உபரிநீரானது காவிரி ஆறு வழியாகப் பாய்ந்து, ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வரும் நாட்களில் கணிசமாக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துச் சாகுபடிக்குத் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
