பகீர்..! 9 நாட்களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவம்..17 வயது தங்கையை விரட்டி விரட்டி வெட்டிய சொந்த அண்ணன்… நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! 9 நாட்களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவம்..17 வயது தங்கையை விரட்டி விரட்டி வெட்டிய சொந்த அண்ணன்… நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 73 கி.மீ தொலைவில் உள்ள மதுரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 17 வயது தங்கையை அவருடைய உடன்பிறந்த சகோதரரே அரிவாளால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி அதே கிராமத்தைச் சேர்ந்த தன் காதலனுடன் 9 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அடுத்த நாளே காவல்துறையினர் அவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனால் தங்கை மீது கடும் ஆத்திரத்தில் இருந்த சகோதரன் கோமல் யாதவ், காலை 7 மணியளவில் அதே விவகாரம் குறித்து தங்கையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கோமல் யாதவ், தங்கையை விரட்டிச் சென்று கழுத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார். சிறுமி படுகாயமடைந்து கீழே விழுந்த பிறகும், கொடூரமாக அவர் மீது பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுத் தாய் சம்பவ இடத்திற்கு ஓடி வந்ததைக் கண்டதும், குற்றவாளியான கோமல் யாதவ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். குடும்பத்தின் கௌரவப் பிரச்சனையைக் காரணம் காட்டி உடன்பிறந்த தங்கையையே அண்ணன் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in