CRIME
ஐயோ இது என்ன கொடுமை..! 19 வயது மகளின் கண்முன்னே துடிதுடித்த தந்தை.. திருடனின் வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் ஜாக்சன் நகரில், புதிதாகத் தொழில் தொடங்க ஆசைப்பட்டு மதுபானக் கடையை விலைக்கு வாங்கிய குஜராத் தொழிலதிபர் சுரேஷ் (62), துப்பாக்கி ஏந்திய கொள்ளையனின் கொடூர புத்தியால் தனது 19 வயது மகளின் கண்முன்னே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கடைக்குள்ளே புகுந்து மிரட்டிய கொள்ளையன் கேட்டபடியே, சுரேஷும் அவரது ஊழியர்களும் தாராள மனதுடன் கல்லாப்பெட்டியில் இருந்த அனைத்துப் பணத்தையும் எடுத்துக் கொடுத்த போதிலும், பணத்தாசையையும் தாண்டி இரக்கமில்லாமல் திடீரென சுரேஷ் மற்றும் ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.
இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சுரேஷ், தனது மகளின் கண்முன்னேயே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும், அவருடன் இருந்த கடை ஊழியர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயம் அடைந்த நிலையில், கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். தகவல் அறிந்து விரைந்து வந்த அமெரிக்கப் போலீசார், காயமடைந்த ஊழியரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததோடு, பலியான சுரேஷின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அமெரிக்காவில் கடை உரிமையைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே, பணத்தைக் கொடுத்த பிறகும் இந்தியத் தொழிலதிபர் கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய கொள்ளையனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
