“புருஷனை கொன்னுட்டேன்” இரவு முழுவதும் சடலத்துடன்…. கொலை செய்ததை போனில் கள்ளக்காதலிக்கு லைவ் அப்டேட் கொடுத்த சித்தி மகன்… 12 நாட்கள் கழித்து வெளிவந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“புருஷனை கொன்னுட்டேன்” இரவு முழுவதும் சடலத்துடன்…. கொலை செய்ததை போனில் கள்ளக்காதலிக்கு லைவ் அப்டேட் கொடுத்த சித்தி மகன்… 12 நாட்கள் கழித்து வெளிவந்த கொடூரம்..!!

Published

on

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இளையராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரங்கூர் முகாம் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வினிதா (30) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்; இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி இளையராஜா அருகில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், இளையராஜாவின் மனைவி அஸ்வினிதாவிற்கும், இளையராஜாவின் சித்தி மகனான வெங்கடேசனுக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய கள்ளத்தொடர்பு இருந்தது செல்போன் பதிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவத்தன்று கீழக்கல்பூண்டி பகுதியில் இளையராஜாவும் வெங்கடேசனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, “எனது மனைவியுடன் ஏன் கள்ளத்தொடர்பில் இருக்கிறாய்?” என்று இளையராஜா கேட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் இளையராஜாவைத் தாக்கவே, அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர், மயங்கிய நிலையில் இருந்த இளையராஜாவைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு இரவு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, இறுதியில் ஒரங்கூர் கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் வீசிப் படுகொலை செய்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க இளையராஜாவின் இருசக்கர வாகனத்தையும் கிணற்றின் அருகிலேயே நிறுத்திவிட்டுத் தப்பியுள்ளார்.

Advertisement

இளையராஜா மயங்கி விழுந்தது முதல் அவரை கிணற்றில் வீசிக் கொன்றது வரை, கள்ளக்காதலன் வெங்கடேசன் அனைத்து விபரங்களையும் போன் மூலமாக மனைவி அஸ்வினிதாவிற்கு அப்டேட் செய்துள்ளார். அஸ்வினிதாவும் இந்த கொடூரக் கொலைக்கு முழு உடந்தையாக இருந்து போலீசாரின் விசாரணையைத் திசைதிருப்ப முயன்றுள்ளார். இதற்கிடையில் வெங்கடேசன் தனது நண்பர் செல்வத்தின் உதவியோடு இளையராஜாவின் பைக்கை எடுத்து வந்து நாடகமாடியதும் அம்பலமானது. தற்போது செல்போன் எண்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் ஆதாரத்தோடு கொலையாளி வெங்கடேசன், அவரது நண்பர் செல்வம் மற்றும் மனைவி அஸ்வினிதா ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in