வேண்டும்.. வேண்டும்.. Wine Shop வேண்டும்… “கடன் வாங்கிக்கூட குடிப்போம்” டாஸ்மாக் முன்பாக ஒரே போராட்டம்… சி.வி.சண்முகத்தை ஷாக் ஆக்கிய மதுபிரியர்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வேண்டும்.. வேண்டும்.. Wine Shop வேண்டும்… “கடன் வாங்கிக்கூட குடிப்போம்” டாஸ்மாக் முன்பாக ஒரே போராட்டம்… சி.வி.சண்முகத்தை ஷாக் ஆக்கிய மதுபிரியர்கள்…!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நடுவனந்தல் பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் டாஸ்மாக் கடையை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வருகை தந்தார். அப்போது திடீரென அங்கு திரண்ட மதுப்பிரியர்கள் சிலர், கடைக்கு முன்பாக நின்று கொண்டு தங்களுக்கு இந்த டாஸ்மாக் கடை கண்டிப்பாகத் தேவை என வினோதமான கோஷங்களை எழுப்பினர்.

அவர்கள், “வேண்டும்.. வேண்டும்.. Wine Shop வேண்டும்.. கடன் வாங்கி கூட குடிப்போம்!” என்று ஆக்ரோஷமாக முழக்கமிட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மற்றும் பெண்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த மதுக்கடையை மூட வேண்டும் எனப் போராடி வரும் நிலையில், முன்னாள் அமைச்சரின் ஆய்வின் போது மதுப்பிரியர்கள் இப்படி பகிரங்கமாக கோஷம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in