LATEST NEWS
“நான் வேணும்னே பண்ணல… மன்னிச்சுடுங்க…” வைரல் வீடியோவால் கைதான மொபைல் ஃபோன்… கதறி அழுது வீடியோ வெளியிட்ட இந்தூர் பிரகிருதி கவுர்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் பிரகிருதி கவுர் என்பவர் மீது, டிராஃபிக் சிக்னலில் உள்ள ஜீப்ரா கிராசிங்கில் படுத்துக் கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்ததற்காகக் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தூரில் உள்ள லேண்டர்ன் சதுக்கம் பகுதியில், சிக்னலில் வாகனங்கள் நின்றிருந்தபோது அவர் ஜீப்ரா கிராசிங்கில் படுத்து போட்டோஷூட் மற்றும் வீடியோ எடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, சமூக ஊடக கண்காணிப்புப் பிரிவு மூலம் இந்த வீடியோவைக் கண்டறிந்த துக்கோகஞ்ச் காவல்துறையினர், அவரை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 270 மற்றும் 285 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீடியோ பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட அவரது மொபைல் போனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறுதல், பொதுமக்கள் மற்றும் சொந்த உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல் போன்ற செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் துணை ஆணையர் ராஜேஷ் தண்டோதியா தெரிவித்துள்ளார். காவல் ஆணையர் சந்தோஷ் குமார் சிங் சமூக ஊடக உள்ளடக்கங்கள் தொடர்பாகப் பிறப்பித்துள்ள தடுப்பு உத்தரவுகளின் கீழும் இந்த விவகாரம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் விதிகளுக்குப் புறம்பாக இருந்தால், அதற்கேற்ப வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
https://www.instagram.com/reel/DcVRiXizvYc/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ இணையத்தில் கடும் விமர்சனங்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பிரகிருதி கவுர் மற்றொரு வீடியோவை வெளியிட்டு மன்னிப்புக் கோரியுள்ளார். அதில், தனது வீடியோ தவறான பார்வையில் சித்தரிக்கப்படுவதாகவும், தான் வேண்டுமென்றே போக்குவரத்து விதிகளை மீறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்ட திட்டங்கள் மற்றும் காவல்துறையினர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகத் தெரிவித்த அவர், இனிவரும் காலங்களில் பொது இடங்களில் வீடியோ எடுக்கும்போது கூடுதல் கவனத்துடன் செயல்படுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
