“இதான் உங்களுக்கு ஃபர்ஸ்ட் & லாஸ்ட் வார்னிங்..!” கொந்தளித்த தவெக தொண்டர்கள்… விஜய பிரபாகரனுக்குக் பறந்த ரெட் அலர்ட்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதான் உங்களுக்கு ஃபர்ஸ்ட் & லாஸ்ட் வார்னிங்..!” கொந்தளித்த தவெக தொண்டர்கள்… விஜய பிரபாகரனுக்குக் பறந்த ரெட் அலர்ட்..!!!

Published

on

கர்நாடகாவில் தீவிரமடைந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனத் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் பேசிய வீடியோ ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் விஜய்யின் திரைப்படப் பாடலை வைத்தே விமர்சித்த அவர், “நான் அடிச்சா தாங்க மாட்டேன், நாலு மாசம் தூங்க மாட்டேன்னு நீங்கதானே அண்ணன் பாடுனீங்க? போய் பாடுங்க அண்ணே, வேணும்னா கன்னடத்துல கூடப் பாடுங்க” என்று நக்கலாகக் குறிப்பிட்டுள்ளார்.

தம்பி @vj_1312

மரியாதையா பேசு. எங்ககிட்ட இந்த மாதிரி வார்த்தைகள் வேண்டாம். விமர்சனம் இருந்தா நாகரிகமா வை; ஆனால் வாய்க்கு வந்தபடி பேசாத.

கேப்டன் மீது இருக்கும் மரியாதைக்காகத்தான் இதை பெரிதுபடுத்தாமல் இருக்கிறோம்.

உன் தவறை திருத்திக்கொண்டு,
இனிமேல் கொஞ்சம் மெச்சூரிட்டியோட… pic.twitter.com/N0DT6WXgTN— ShArun Vijay (@Arun37929513) August 1, 2026

மேலும், “தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எல்லாரும் கூட ஓடுங்க… ஓடு ஓடு ஓடுன்னு ஓடுறா!” எனத் தவெகவினரை ஏகவசனத்திலும் ஒருமையிலும் கட்டளையிடுவது போல் விஜய பிரபாகரன் பேசிய வார்த்தைகள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. அரசியல் நாகரிகமற்றுப் பேசுவதாகக் கூறி இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் விஜய பிரபாகரனுக்குத் தவெக தொண்டர்கள் காரசாரமான பதிலடிகளைக் கொடுத்து வருகின்றனர். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இடத்தை நிரப்ப நினைப்பவர், பொதுவெளியில் பேசும்போது குறைந்தபட்ச மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதைக் கடுமையான முதல் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், காவிரி போன்ற உணர்வுப்பூர்வமான மாநிலப் பிரச்சனைகளில் அரசியலாக்காமல் ஆக்கபூர்வமாகச் செயல்படுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in