LATEST NEWS
எப்போ வரும்முன்னு வெறியோட காத்துக்கிட்டு இருக்கேன்…. கோடி கோடியா செலவு பண்ணி எதுக்கு தெருத்தெருவா அலையனும்.? சீமான் ஆவேசம்..!!
இடைத்தேர்தல் எப்போது வரும் என்று வெறியோடு காத்திருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திமுக செய்த வெற்று விளம்பர அரசியலைத் தான் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் பின்பற்றிச் செய்கிறது என்று விமர்சித்தார். மேலும், இவ்வளவு கோடிரூபாய்களை செலவு செய்து தெருத்தெருவாக விளம்பரம் செய்வது எதற்காக என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களிடம் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள் என்று சொல்பவர்களால், லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வேன் என்று உறுதியாகக் கூற முடியவில்லை என்றும் சாடினார். ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாடுகளையும், லஞ்ச ஊழலை ஒழிக்க முடியாத பலவீனத்தையும் சுட்டிக்காட்டி அவர் தனது உரையில் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
