கோவை மாணவனின் மரணத்திற்கு…. தாய் மாமன் என்ற முறையில் முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்..? சீமான் அதிரடி கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோவை மாணவனின் மரணத்திற்கு…. தாய் மாமன் என்ற முறையில் முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்..? சீமான் அதிரடி கேள்வி..!!

Published

on

கோவையில் 19 வயது கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜயை நோக்கி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்துத் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமுதனின் மரணத்திற்குக் காரணமான உண்மைகளை மூடி மறைக்கக் கல்லூரி நிர்வாகம் முயல்வதாகவும், பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் போக்கில் செயல்படுவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேலும், மாநில அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள போதைப் பொருட்களின் பயன்பாட்டிற்கும், இந்த கொடூரக் கொலைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறி உண்மையை ஆளும் தவெக அரசு கொன்று புதைப்பதாகச் சாடியுள்ளார். மாணவனின் மரணத்திற்குத் தாய் மாமன் என்ற முறையில் முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ள சீமான், அரசின் இந்தச் செயல்பாடுகளும் மெத்தனப் போக்கும் முற்றிலும் வெட்கக்கேடானது எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in